மார்கழி வாடைகாற்றின் ஸ்பரிசம் பட்டு
தலை வணங்கி நாணம் கொள்ளும் நெற் கதிராய்
உன் வெக்கமும்
அதன் மேல் வீற்றிருக்கும் பனித்துளியாய்
அந்த மூக்குத்தியும்.
உன் கண்களின் மொழியில் ஊமையாகிபோன
என் கண்ணியத்தை பார்த்து அழும்
மனதின் நிலை ,
நிலவை விழுங்கும் பாம்பை கண்டு
மலங்க விழிக்கும் இரவை போல் ஆனது
கொண்ட நினைவுகளை கலைத்து போட முடியவில்லை
கண்ட கனவுகளை ஒழுங்குபடுத்த முடியவில்லை
வெற்று கற்பனயில் உனக்கு தாலி கட்டி பார்கிறேன்
நீ திருமண பத்திரிகையை கொடுத்து நகன்ற பொழுது
- புவன்