Friday, January 21, 2011

மார்கழி வாடைகாற்றின் ஸ்பரிசம் பட்டு

 
மார்கழி  வாடைகாற்றின் ஸ்பரிசம் பட்டு
தலை வணங்கி நாணம் கொள்ளும் நெற் கதிராய் 
உன் வெக்கமும்
அதன்  மேல் வீற்றிருக்கும் பனித்துளியாய்  
அந்த மூக்குத்தியும்.
 
உன் கண்களின் மொழியில் மையாகிபோன  
என் கண்ணியத்தை பார்த்து அழும்
மனதின் நிலை ,
நிலவை விழுங்கும் பாம்பை கண்டு
மலங்க விழிக்கும் இரவை போல்  ஆனது
 
கொண்ட நினைவுகளை கலைத்து போட முடியவில்லை
கண்ட கனவுகளை ஒழுங்குபடுத்த முடியவில்லை
வெற்று கற்பனயில் உனக்கு தாலி கட்டி  பார்கிறேன்
நீ  திருமண பத்திரிகையை கொடுத்து நகன்ற பொழுது
 
                                      - புவன்  

No comments:

Post a Comment